Thursday, July 20, 2006

ஜாக்கிஜான் வாழ்க்கை வரலாறு

சமீபத்தில் நான் படித்த நூல்களில் என்னை மிகவும் கவர்ந்தது ச.ந.கண்ணன் எழுதிய (கிழக்கு பதிப்பக நூல்) குதி. ஜாக்கிஜான் படங்களில் டூப் போட்டு நடிப்பதில்லை. உயிரை பணயம் வைத்து நடிக்கிறார் என்பது உள்பட ஏராளமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது. முயற்சி செய்ய வேண்டும் முயற்சி என்றால் சாதாரணமாக இருந்தால் போதாது. மதுரை பாஷையில் சொன்னால் காட்டுத்தனமாக முயற்சிக்க வேண்டும். அது எந்தத் துறையாக இருந்தாலும் சரி.
இந்நூல் ஒரு உற்சாக டானிக் என்றால் அது மிகையில்லை.

Friday, July 14, 2006

காதல்

என்னை
கொலை செய்யத்தூண்டும்
உன்னைக் கடிக்கும்
கொசு.

நலம்

உன்
உடல் நலமில்லை
என்றாய்

என்
மனம்
நலமில்லாமல் போனது...

வாழ்க்கை

வாழ்க்கையென்பது
ஒவ்வொருவர் பார்வையில்
ஒவ்வொரு விதம்

என்னைப் பொருத்தவரை
வாழ்க்கையென்பது
உன்னுடன் வாழ்வது...

அழகு

அழகு என்றால் என்ன?
எனக்கு பெரிய சந்தேகம்
இருந்துகொண்டே இருந்தது

உன்
கண்களை
காணும்வரைக்கும்..

அழகு என்றால் என்ன?
கண்கள் என்று
சொல்வேன் இப்போது...

Tuesday, July 11, 2006

தியானம்

தெய்வத்தை
தியானிப்பவளே

நானும்
தினம் தினம்
தியானம் செய்கிறேன்

உன்னை நினைத்து
உன்னை மட்டுமே நினைத்து...

Sunday, July 09, 2006

வில்வத்தின் பெருமை

வில்வம் பல விதங்களில் பெருமை பெற்றதாகும். சிவனுக்கு மிகவும் பிடித்த வில்வத்திற்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. அதாவது வில்வத்தை பறித்து எத்தனை நாட்கள் ஆனாலும் பூஜை செய்ய பயன்படுத்தலாம் தவிர ஒருமுறை பூஜைக்கு பயன்படுத்திய வில்வத்தை மீண்டும் பயன்படுத்தலாம் இது வேறு எந்த மலருக்கும் இல்லாத பெருமையாகும்

உன்னை நினைத்து

சே
என்ன இறைவன்
ஒரு நாளை
இவ்வளவு சிறியதாக
படைத்துள்ளானே

ஒரு நாளைக்கு
24 மணி நேரம்தானே
உன்னை
நினைக்க முடிகின்றது

அறை

பளார்
என்று அறையப் போவதாக
கூறினாய்

எனக்கு
சற்று வருத்தம்தான்

நீ
அறைவதற்கு
எனக்கு
இரண்டு கன்னங்கள்தானே
இருக்கின்றதென்று...

காதல்

அன்பே
அந்த மரணம்கூட
சுகமானதுதான் எனக்கு

உன்
மடியில்
எனும்போது...

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது